பாகிஸ்தானுக்கு நிதி விடுவித்தமை தொடர்பில் ஐ.எம்.எப் விளக்கம்

பாகிஸ்தானுக்கு நிதி விடுவித்தமை தொடர்பில் ஐ.எம்.எப் விளக்கம்

பஹல்காம் தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு காணப்படுவதாக இந்தியா குற்றம் சுமத்தி வந்த நிலையில், சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான நிதி உதவியை சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்தது.

இதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது சர்வதேச நாணய நிதியம் விளக்கமளித்துள்ளது.

அனைத்து நிபந்தனைகளையும் பாகிஸ்தான் பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து நிதியை விடுவித்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

“பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவது என்று எடுக்கப்பட்டிருந்த முடிவை, கடந்த ஆண்டு செப்டம்பரில் நாங்கள் மீளாய்வு செய்திருந்தோம்.

அதன் அடிப்படையில் மே 9 ஆம் திகதி இரண்டாவது கட்டமாக அந்நாட்டுக்கு நிதி விடுவிக்கப்பட்டது. மீளாய்வின்போது, திட்டம் சரியான பாதையில் செல்கிறதா,
திட்டத்தின் கீழ் உள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா, திட்டத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வர ஏதேனும் கொள்கை மாற்றங்கள் தேவையா என்பதை நாங்கள் ஆய்வு செய்தோம்.

பாகிஸ்தான் அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்திருக்கிறது. சில சீர்திருத்த நடவடிக்கைகளிலும் அது முன்னேற்றம் அடைந்திருக்கிறது. எனவேதான் நாங்கள் அடுத்தக்கட்ட நிதியை விடுவித்தோம். நாங்கள் இதற்கு முன்னர் கொடுத்த நிதி அனைத்தும் அந்நாட்டின் மத்திய வங்கி கணக்கில் சரியாக வரவு வைக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

 

 

Share This