ஜோ பைடன் கடுமையான புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிப்பு

ஜோ பைடன் கடுமையான புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிப்பு

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடுமையான புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பைடனின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் இதைத் தெரிவித்தன.

புற்றுநோய் எலும்புகளுக்கும் பரவியுள்ளதாக மருத்துவர்கள் இப்போது கூறியுள்ளதாக அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இ

82 வயதான முன்னாள் ஜனாதிபதி பைடனுக்கு புற்றுநோய் இருப்பது கடந்த வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியான குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பிற்கு முன்னர், பைடன் ஜனாதிபதி பதவியை வகித்தார். பைடன் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This