
ஹெராயின் வைத்திருந்த மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது
ஹெராயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமைக்காக மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்தது.
இந்த மூவரும் 2018 ஆம் ஆண்டு பேருவளையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் பல நாள் மீன்பிடிக் கப்பலில் 17 கிலோகிராம் ஹெராயினைக் கொண்டு சென்றபோது கைது செய்யப்பட்டனர்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் ஐந்து பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே உத்தரவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
CATEGORIES இலங்கை
