பஸ் விபத்துக்களில் காயமடைந்தவர்களை, ஹெலிகப்டர் மூலம் கொழும்புக்கு அழைத்துவர நடவடிக்கை

பஸ் விபத்துக்களில் காயமடைந்தவர்களை, ஹெலிகப்டர் மூலம் கொழும்புக்கு அழைத்துவர நடவடிக்கை

ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியிலும் வெலிமடையிலும் இடம்பெற்ற பஸ் விபத்துக்களில் பலத்த காயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்து வர இரண்டு ஹெலிகப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைய, இரத்மலானை விமானப்படை தளத்தில் இந்த இரண்டு ஹெலிகப்டர்களையும் விமானப்படை தயார் நிலையில் வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நடவடிக்காக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு பெல் 412 ரக ஹெலிகப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

Share This