கொழும்பில் மாணவி அம்ஷிக்கு நீதிகோரி பெரும் போராட்டம் – இரமநாதன் இந்து கல்லூரி வளாகத்தில் பதற்றம்

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் உள்ள டூப்ளிகேஷன் வீதி முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் கொட்டாஞ்சேனை பகுதியில் கட்டிடத்தில் இருந்து விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மாணவி கல்வி பயின்ற இரமநாதன் இந்து மகளீர் கல்லூரிக்கு முன்பாக பெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவி சம்பந்தப்பட்டபாடசாலையிலன் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், அதன் விளைவாக மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த மாணவி அம்ஷிக்கு நீதி கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆசிரியரையும் கைது செய்யுமாறு போராட்ட காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக டூப்ளிகேஷன் வீதி முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதியில் ஒருவித பதற்றம் நிலவியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.