பாக்கெட்டில் ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடி வீரர் – வைரலாகும் காணொளி

பாக்கெட்டில் ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடி வீரர் – வைரலாகும் காணொளி

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் நடந்த ஒரு அரிய சம்பவத்தின் வீடியோ தற்போது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக உள்ளது.

மைதானத்தில் மக்கள் தங்கள் கையடக்க தொலைபேசிகளை பைகளிலோ அல்லது கைகளில் வைத்துக் கொண்டோ கிரிக்கெட் பார்வையிடுவதை காணமுடியும்.

ஆனால் தொழில்முறை கிரிக்கெட் விளையாடும் வீரர்களால் அவ்வாறு கையடக்க தொலைபேசிகளை வைத்துக்கொண்டு விளையாட முடியாது.

இந்நிலையில், ​​கவுண்டி கிரிக்கெட்டில் ஓட்டம் எடுக்க ஓடும்போது ஒரு துடுப்பாட்ட வீரரின் பாக்கெட்டிலிருந்து ஸ்மார்ட்போன் மைதானத்தில் விழும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற்ற லங்காஷயர்-குளூசெஸ்டர்ஷயர் போட்டியின் போது நடந்தது. லங்காஷயர் வீரர் டாம் பெய்லி ஓட்டங்கள் எடுக்க முயன்றபோது அவரது பாக்கெட்டிலிருந்து ஸ்மார்ட்போன் மைதானத்தில் விழுந்தது.

இந்த சம்பவம் போட்டியின் 114வது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. இதை முதலில் கவனிப்பவர்கள் வர்ணனையாளர்கள்தான். “அவரது பாக்கெட்டிலிருந்து ஏதோ விழுந்துவிட்டது, அது ஒரு மொபைல் போன் போல் தெரிகிறது” என்று ஒரு வர்ணனையாளர் கூறினார்.

மற்றொரு வர்ணனையாளர் அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார். இந்தப் போட்டியில் பெய்லி 31 பந்துகளில் 22 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Share This