பெளத்த சாசனத்தைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும் – யாழில் சுவரொட்டிகள்

பெளத்த சாசனத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும் என தெரிவித்து யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
NPP ஆதரவு அணி – என்ற உரிமத்துடன் வடக்கு கிழக்கு பகுதிகளில் இவ்வாறான சுவரொட்டிகள் நேற்று அதிகாலை முதல் காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சுவரொட்டிகள் தென்மராட்சிப் பகுதிகளின் கிராமங்கள் தோறும் வீதிகளில் ஒட்டப்பட்டுள்ளதைக் காண முடிவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.