எதிர்வரும் ஆறாம் திகதி அனைத்து தரப்பினருக்கும் விடுமுறை

எதிர்வரும் ஆறாம் திகதி அனைத்து தரப்பினருக்கும் விடுமுறை

எதிர்வரும் ஆறாம் திகதிக்கான விடுமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

இதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் ஆறாம் திகதி அரச மற்றும் தனியார் துறையினருக்கு வேதன குறைப்பின்றி விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தேர்தல்களை ஆணைக்குழு இந்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளது.

இதன்படி, பல்கலைக்கழகங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

மேலும், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் குறித்த தினத்தில் விடுமுறை வழங்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் தேர்தல் அலங்கரிப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This