நல்லை ஆதினத்தின் மறைவு சைவ சமயத்திற்கு பேரிழப்பு – செந்தில் தொண்டமான்

சைவ சமயத்திற்காகவும், சமூக நல்லிணக்கம் தழைத்தோங்கவும் தன்னை அர்ப்பணித்த நல்லை ஆதினம் அவர்களின் மறைவு செய்தி வேதனையளிக்க கூடிய ஒன்று என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த பல வருடங்களாக எனக்கு அவருடன் பழகக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். அவருடனான ஒவ்வொரு சந்திப்பின் போதும் பல்வேறுப்பட்ட ஆன்மீக சிந்தனைகளை கூறுவார். அவரிடம் கேட்கப்படும் ஒவ்வொரு ஆன்மீக ரீதியான கேள்விகளுக்கும் எளிதாக விளங்கிக் கொள்ள கூடிய வகையில் பதிலளிப்பார். அவருடைய மறைவு எனக்கு துயரமளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இவர் உலக மதங்கள் குறித்தான தெளிவான பார்வை உடையவர். இவருடைய இழப்பு ஆன்மீக துறைக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும்.
நல்லை ஆதீனம் அவர்களின் மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்