மே தினத்தை முன்னிட்டு கொழும்பி விசேட போக்குவரத்து திட்டம்

மே தினத்தை முன்னிட்டு கொழும்பி விசேட போக்குவரத்து திட்டம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (1) விசேட பொலிஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பிற அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு இந்தப் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

அதன்படி, காலி முகத்திடல், கெசல்வத்த, ஆர்மர் வீதி, ஹைட் பார்க், தபால் அலுவலக தலைமையகம், நூலக கேட்போர் கூடம் வளாகம், விஹார மகா தேவி வெளிப்புற பூங்கா, கோஸ்கஸ் சந்தி உள்ளிட்ட பல பகுதிகளில் அரசியல் கூட்டங்கள் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பகுதிகளில் பாதுகாப்ப மற்றும் விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

 

Share This