கண்டியில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று திறப்பு

கண்டியில் மூடப்பட்டிருந்த  பாடசாலைகள் இன்று திறப்பு

புனித தந்ததாது கண்காட்சியை முன்னிட்டு, ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்ப்பதற்குக் கண்டி நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மூடப்பட்டிருந்த 24 பாடசாலைகளும் இன்று திறக்கப்படவுள்ளன.

அத்துடன், பாதுகாப்பு பிரிவினரின் தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்ட 37 பாடசாலைகள் நாளை மீளத் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

இதேவேளை, கண்டி நகரினை தூய்மைப்படுத்தும் விசேட திட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண சபை, கண்டி மாநகர சபை, மாவட்ட செயலகம் மற்றும் மாகாண கல்வித் திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்கேற்புடன் இந்த தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது குறித்த காலப்பகுதியில் கண்டி நகரைத் தூய்மைப்படுத்தும் செயற்பாட்டிற்குப் பங்களிப்பு செய்த கண்டி மாநகரசபை பணியாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This