பாகிஸ்தான் அரசின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தள பக்கம் முடக்கம்

காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான இராஜதந்திர உறவுகளை இந்தியா அதிரடியாக குறைத்துள்ளது.
பிரபல சமூக ஊடக தளமான X இல் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கமைய பாகிஸ்தான் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அனந்த்நாக்கில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய பல முடிவுகள் எடுக்கப்பட்டன.