முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பு நேற்று (22) பிற்பகல் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இருவரும் சுமூகமான உரையாடலை நடத்தியதாகவும், அரசியல் மற்றும் தனிப்பட்ட கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நெருங்கிய அண்டை நாடுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆழமான நட்பை முன்னாள் ஜனாதிபதிமரியாதையுடன் நினைவு கூர்ந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

CATEGORIES
TAGS
Share This