17 வது முறையாக WWE சம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்தார் ஜோன் சீனா

17 வது முறையாக WWE சம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்தார் ஜோன் சீனா

பிரபல மல்யுத்த வீரர் ஜோன் சீனா 17வது முறையாக WWE சம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

ரெஸில்மேனியா 41 (WrestleMania 41) போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கோடி ரோட்ஸை வீழ்த்தி ஜோன் சீனா 17 வது முறையாக WWE சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

இதன் மூலம் 16 முறை WWE சம்பியன் பட்டம் வென்றிருந்த ரிக் ஃபிளேரின் சாதனையை ஜோன் சீனா முறியடித்துள்ளார்.

ரெஸில்மேனியா 41 தொடருடன் WWE போட்டிகளில் ஓய்வு பெறப்போவதாக ஜோன் சீனா அறிவித்த நிலையில், இன்று நடைப்பெற்ற அவரது போட்டி பெரும் எதிர்பார்ப்பினை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.

சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த இந்தப் போட்டியில் இறுதியில் முன்னாள் சம்பியன் கோடி ரோட்ஸை வீழ்த்திய ஜோன் சீனா, 17வது முறையாக பட்டத்தை வென்றார்.

16 முறை WWE சம்பியன் பட்டத்தை ரிக் ஃபிளேர் வென்றிருந்தமையே இதுநாள் வரை WWEஇல் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த சாதனையை சீனா முடியறித்துள்ளார்.

இந்நிலையில், ஜோன் சீனாவிற்கு முன்னாள் மல்யுத்த வீரர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகழளை கூறிவருகின்றனர்…

Share This