மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயித்த ஞாயிறு விசேட ஆராதனைகள்

மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலையில் இடம்பெற்றுள்ளன.
இன்று உயிர்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு மாவட்டதிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றிருந்தன.
இதனையடுத்து தேவாலயங்களில் பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்
கடந்த 2019 ஏப்பில் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் சியோன் தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்மை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் பல தேவாலயங்களில் நடைபெற்றன.
இதன்படி, முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் சிறப்பு வழிபாடு முன்னெடுக்கப்பட்டது.
உயிர்ப்பின் செய்தியை தாங்கிய சாட்சி பவணயைத் தொடர்ந்து வழிபாடு ஆரம்பமானது.
திருச்சபையின் சிரேஸ்ட குருவாகிய வண பிதா எஸ்.குகனேஸ்வரன் திருப்பலியை ஒப்புக் கொடுத்து ஆசி வழங்கினார்.