கொங்கோ படகு விபத்து – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 148 ஆக உயர்வு

கொங்கோ குடியரசின் வடமேற்கு பகுதியில் பயணிகள் படகொன்று விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்வடைந்துள்ளது.
படகில் தீப்பரவல் ஏற்பட்டதை தொடர்ந்து படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
வடமேற்கு கொங்கோவில் உள்ள மடான் குமு துறைமுகத்தில் இருந்து போலோம்பா பகுதிக்கு மோட்டார் படகொன்றில் 500 இற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர்.
இந்தப் படகு விபத்துக்குள்ளானதில் மேலும் 100 பேர் காணாமற் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை விபத்தில் இருந்து தப்பிய 100 பேர் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.