பெற்றோலியப் பொருட்கள் ஏற்றுமதி வருவாய் வரலாற்றில் மிக உயர்ந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது

பெற்றோலியப் பொருட்கள் ஏற்றுமதி வருவாய் வரலாற்றில் மிக உயர்ந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது

நாட்டின் பெற்றோலியப் பொருட்கள் ஏற்றுமதி வருவாய் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான எரிபொருள் விநியோக அளவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

செங்கடலில் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்ட இடையூறுகள் பெற்றோலியப் பொருட்களின் ஏற்றுமதி வருவாயையும் அதிகரிக்க வழிவகுத்தன.

கடந்த ஆண்டு, நாட்டின் ஏற்றுமதி வருவாய் 12.8 பில்லியன் டொலராக பதிவாகியுள்ளது. இது 2023 உடன் ஒப்பிடும்போது 7.02 வீத வளர்ச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This