மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மாலைத்தீவில் ஜேசிபி சாரதியாக பணியாற்றிய இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலை இன்று (16) காலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் தொடங்கஸ்லந்த – உடு ஹொரம்புவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் சுமார் 15 நாட்களுக்கு முன்பு தனது தங்குமிடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில் நீந்திக் கொண்டிருந்ததாகவும், அங்கேயே நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்த நாட்டில் வசிக்கும் ஒருவர் கடலில் அவரது உடல் மிதப்பதைக் கண்டு மாலைத்தீவு பொலிஸாருக்குத் தகவல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவு தடயவியல் மருத்துவ அறிக்கைகளின்படி, நீரில் மூழ்கியதால் மரணம் ஏற்பட்டதாக மாலத்தீவு அரசாங்கமும் நீர்கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியும் உறுதிப்படுத்தினர்.

முன்னதாக குறித்த நபர் மாலைத்தீவில் சுமார் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்ததாகவும், விடுமுறையில் தாயகம் திரும்பியிருந்த அவர், கடந்த மூன்று மூன்று மாதங்களுக்கு முன்பு பணிக்கு திரும்பியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This