நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் கிடைக்கின்ற ஆசனத்தில் பயணியுங்கள் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

மக்களுக்குப் போதுமான பேருந்துகளை இன்றும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ள அந்த ஆணைக்குழுவின் போக்குவரத்து மற்றும் சேவை கண்காணிப்பு பணிப்பாளர் ஷெரின் அத்துகோரள, போதுமான பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் உரிய ஆசனம் கிடைக்கும் வரையில் மக்கள் காத்திருப்பதுடன், அதனால் வரிசை உருவாகிறது.
இதனடிப்படையில் தேவையான அளவில் மாத்திரம் பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் கிடைக்கின்ற ஆசனத்தில் பயணிக்குமாறு பொது மக்களிடம் கோருவதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் போக்குவரத்து மற்றும் சேவை கண்காணிப்பு பணிப்பாளர் ஷெரின் அத்துகோரள தெரிவித்துள்ளார்.