யாழ்ப்பாணத்தில் பசு ஒன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய நிகழ்வு

மிக மிக அரிதாக இடம்பெறும் சில நிகழ்வுகளில் பசு ஒன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய நிகழ்வு யாழ்ப்பாணம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி, உடுப்பிட்டி இலக்கணாவத்தை பகுதி விவசாயி ஒருவர் விலங்கு வேளாண்மையிலும் ஈடுபட்டு வருகின்றார். அவரின் பசுவொன்று நேற்று முன் தினம் மூன்று கன்றுகளை ஈன்றுள்ளது.
இரண்டு நாம்பன், ஒரு பசுக் கன்று ஈன்றுள்ளதானது இலங்கையிலேயே முதலாவதாக இருக்கலாம் என விவசாயி மகழ்ச்சியாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மூன்று கன்றுக் குட்டிகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.