சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு அரச மரியாதை

சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு அரச மரியாதை

இலங்கைக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்தி மோடிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை 9.00 மணிக்கு அரச மரியாதை வழங்கப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த அரச மரியாதை வழங்கும் நிகழ்வில் 19 துப்பாக்கி வேட்புக்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்வில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையிலான இந்திய தூதுக்குழுவும், பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான இலங்கை தூதுக்குழுவும் கலந்துகொண்டதுடன், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அரச மரியாதை நிறைவுற்றதும் பிரதமர் மோடி ஜனாதிபதி செயலகம் நோக்கி புறப்பட்டுள்ளார்.

இங்கு இருநாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற உள்ளது.

இந்த பிரதமர் மோடி நாளை தமது அரசுமுறை பயணத்தை நிறைவுசெய்துகொண்டு நாடு திரும்ப உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், விசேட போக்குவரத்துத் திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Share This