அமெரிக்காவின் வரி அதிகரிப்பு – வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரிகளை கடுமையாக அதிகரித்ததன் காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
ட்ரம்ப் அனைத்து இறக்குமதிகளுக்கும் அடிப்படை 10 சதவீத வரியை அறிவித்துள்ளார். குறிப்பாக ஆசிய நாடுகள் மீது மிக அதிக வரிகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில், உலகளாவிய பங்கு சந்தைகளில் பாரிய வீழ்ச்சி பதிவாகியிருந்ததுடன், தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதன்படி, புதன்கிழமை பிற்பகலுக்குள், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,118 டொலாக உயர்ந்தது, இது 0.3 வீத அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை முதல் முறையாக 3,000 டொலரை எட்டியது.
முதலீட்டாளர்களுக்கு தங்கம் ஒரு பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படுகிறது, மேலும் பொருளாதார உறுதியற்ற காலங்களில் இது பெரும்பாலும் தேவைப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி அதிகரிப்பு காரணமாக எண்ணெய் விலைகள் எதிர்மறையான பகுதிக்கு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரெண்ட் ஃபியூச்சர்ஸ் பீப்பாய் 74.95 டொலாகவும், WTI கச்சா எண்ணெய் 71.71 டொலராகவும் சரிந்துள்ளது.
இதனிடையே, அமெரிக்காவின் வரி அதிகரிப்பை தொடர்ந்து உலக நாடுகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான நாணயங்களின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.