முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (01) தொடங்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதலாம் தவணையின் முதல் கட்டம் கடந்த 14 ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்தது.
எவ்வாறாயினும், ரமலான் பண்டிகையை முன்னிட்டு இன்று முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்க கல்வி அமைச்சகம் முடிவு செய்திருந்தது.
இதற்கிடையில், இந்த நாட்களில் குழந்தைகளிடையே சின்னம்மை பரவுவது குறித்து பெற்றோர்கள் கவனம் செலுத்துமாறு சுகாதாரத் துறை கேட்டுக்கொள்கிறது.
இதுபோன்ற அறிகுறிகள் உள்ள குழந்தைகள் இருந்தால், அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை தவிரக்க வேண்டும் என்று குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இதற்கிடையில், தற்போதைய நாட்களில் நிலவும் அதிக வெப்பநிலையுடன் குடிநீர் மிகவும் முக்கியமானது என்று சிறப்பு வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.