ராஜபக்ச அரசாங்கத்தில் எடுத்த தவறான முடிவால் ஏற்பட்ட விளைவு – நாமல் எம்.பி கவலை

ராஜபக்ச அரசாங்கத்தில் எடுத்த தவறான முடிவால் ஏற்பட்ட விளைவு – நாமல் எம்.பி கவலை

தற்போதைய அரசாங்கத்திற்கு, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக தனிப்பட்ட பிரச்சினை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் சட்டத் துறையில் இருந்தவர்களுடன் அரசாங்கத்திற்கு தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்ததாகவும், பொலிஸ் மா அதிபருடன் இதே போன்ற பிரச்சினை இருந்தால், அதை அரசியலமைப்பின் படி தீர்க்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

ராஜபக்சவின் வரலாற்றிலும் கூட, சில அதிகாரிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகள் தவறாக இருந்தன என்றும், அந்தத் தவறுகளின் விளைவுகளை இன்றும் தனது கட்சி அனுபவித்து வருவதாகவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டுகிறார்.

ராஜபக்ச அரசாங்கத்தின் போது தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்ய எடுக்கப்பட்ட முடிவும் தவறான முடிவு என்றும், ராஜபக்ச அரசாங்கம் செய்த அதே தவறை தற்போதைய அரசாங்கம் செய்யக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பொலிஸ்மா அதிபருடன் அரசாங்கத்திற்கு தனிப்பட்ட பிரச்சனை இருப்பது போல் தெரிகிறது. அதேபோல், சட்டத் துறையில் உள்ளவர்களுடன் அரசாங்கத்திற்கு ஏற்கனவே தனிப்பட்ட பிரச்சனைகள் உள்ளன.

பொலிஸ்மா அதிபருடன் அரசாங்கத்திற்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது அரசியலமைப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

நமது வரலாற்றில் சில அதிகாரிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகள் தவறானவை என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு கட்சியாக, அந்தத் தவறுகளின் விளைவுகளை நாங்கள் இன்னும் அனுபவித்து வருகிறோம்.

எனவே, எதிர்காலத்தில் ஒரு அதிகாரியை குறிவைத்து அரசியல் முடிவை எடுக்க நாடாளுமன்றத்தின் அதிகாரம் பயன்படுத்தப்பட்டால், நாங்கள் தனிப்பட்ட முறையிலும் ஒரு கட்சியாகவும் அதற்கு உடன்பட மாட்டோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This