உள்ளூராட்சி தேர்தல் – வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டி ஆகிய பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
அத்துடன் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி நாளை வியாழக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் மே 06 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.