தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலஅவகாசம் இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலஅவகாசம் இன்று (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும், நேற்று நிலவரப்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட அங்கீகரிக்கப்பட்ட பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வாக்களிப்பு நடைபெறவுள்ளது.