கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு துப்பாக்கிதாரிகள் லொரியில் வந்து பாதிக்கப்பட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.