குரங்குகள் கணக்கெடுப்பில் பங்கேற்க நாடாளுமன்றத்திற்கு விடுமுறை வழங்க வேண்டும்

குரங்குகள் கணக்கெடுப்பில் பங்கேற்க நாடாளுமன்றத்திற்கு விடுமுறை வழங்குமாறு பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.
இன்று (14) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“சபாநாயகர் அவர்களே, நாளைக்கு எங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும்.
குரங்குகள் கணக்கெடுப்பு நாளை காலை 8 மணி முதல் 8.5 மணி வரை நடைபெறும்.
நாமும் அந்த குரங்கு கணக்கெடுப்புக்கு செல்ல வேண்டும்.
இல்லையென்றால், அந்தத் தொகையுடன் நமது 225யையும் சேர்த்து விடுவார்கள்.
எங்களுடைய காணிகளுக்கு வரும் குரங்குகளை யார் எண்ணுவார்கள்? அதனால் எங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.