ஐபிஎல் 2025 – டெல்லி அணியின் தலைவராக அக்சர் பட்டேல் அறிவிப்பு

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான டெல்லி கேபிடல்ஸ், சகல துறை வீரரான அக்சர் பட்டேலை அணியின் புதிய தலைவராக அறிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அணியின் புதிய தலைவரை டெல்லி அணி அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2025 இல் அணியின் தலைவர் குறித்து ஒன்பது அணிகளும் ஏற்கனவே முடிவு செய்துள்ள நிலையில், இதுவரை தங்கள் தலைவரை அறிவிக்காத ஒரே அணியாக டெல்லி இருந்தது.
இந்நிலையில், தற்போது அணியின் புதிய தலைவரை டெல்லி அணி அறிவித்துள்ளது.
“டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்துவது எனது முழுமையான மரியாதை, மேலும் என் மீது நம்பிக்கை வைத்த அணியின் உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” அக்சர் பட்டேல் தெரிவித்துள்ளார்.
“நான் டெல்லி கேபிடல்ஸில் இருந்த காலத்தில் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராகவும் வளர்ந்துள்ளேன், மேலும் இந்த அணியை முன்னோக்கி வழிநடத்த நான் தயாராகவும் நம்பிக்கையுடனும் இருக்கின்றேன்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மேலும் ரசிகர்களின் அபரிமிதமான அன்பு மற்றும் ஆதரவுடன் அணியை மிகவும் வெற்றிகரமான நிலைக்கு கொண்டுச் செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐபிஎல் தொடரின் போது டெல்லி அணியை ஒரு போட்டியில் அக்சர் பட்டேல் வழிநடத்தியிருந்தார். எனினும், அந்த போட்டியில் அணி தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.