புறக்கோட்டை சிவப்பு பள்ளிவாசலுக்கு அருகில் பாரிய தீவிபத்து

கொழும்பு – புறக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சிவப்பு பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள கடையொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.