பாவனாவின் த்ரில்லர் திரைப்படம் ‘தி டோர்’…டீசர் வெளியானது

சித்திரம் பேசுதடி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பாவனா. தொடர்ந்து தீபாவளி, வெயில், ராமேஷ்வரம், அசல் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது தி டோர் எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப் படத்தை ஜெயா தேவ் இயக்கியுள்ளார். இப் படம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இத் திரைப்படத்தில் பிக்பொஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன், பாலா, ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப் படம் இம் மாதம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.