டெங்கு அபாயம் – கியூபாவிலிருந்து சிறப்பு நிபுணத்துவத்தைப் பெற அரசாங்கம் தீர்மானம்
நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு கியூபா சுகாதார அதிகாரிகளிடம் இருந்து சிறப்பு அறிவைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கான கியூபா தூதுவர் மற்றும் இலங்கை சுகாதார அதிகாரிகளுக்கு இடையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டள்ளது.
இச்சந்திப்பின் போது டெங்கு நோயைக் கட்டுப்படுத்த கியூபா அரசாங்கம் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கைகளை வலியுறுத்திய தூதுவர், இலங்கையில் டெங்குவை ஒழிப்பதற்கு கியூபா அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும் எனவும் உறுதியளித்தார்.
இலங்கையில் பொது சுகாதார திட்டங்களை மேம்படுத்துவதற்கு பொருத்தமான நிபுணத்துவம் மற்றும் அறிவை வழங்குவதே கியூபா அரசாங்கத்தின் நோக்கம் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.
கலந்துரையாடலின் போது நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் பல முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இலங்கையில் ,இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 24 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன் மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 45,959 ஆக அதிகரித்துள்ளது.