சாலையோறத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தை மீட்பு

சாலையோறத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தை மீட்பு

மாதம்பே, தேவகொட பிரதான வீதியின் ஓரத்தில் கைவிடப்பட்ட நிலையில் இரண்டு மாத பெண் குழந்தை ஒன்று இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூர்வாசிகள் கொடுத்த தகவலின் பேரில், குழந்தை சாலையோரத்தில் அழுது கொண்டிருந்ததை கண்டு மீட்டுள்ளனர்.

அம்பலாங்கொடை பொலிஸாரின் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி ரேணுகா உட்பட ஒரு பெண் பொலிஸர் குழு, பிரதான சாலையில் இருந்து குழந்தையை மீட்டு பலபிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதித்தனர்.

குழந்தையின் உடல்நிலை மிகவும் நன்றாக இருப்பதாக பலபிட்டிய ஆதார மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், குழந்தையின் தாயார் தொடர்பான விசாரணைகள் இன்று (10) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This