இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டாரா கைது

பிலியந்தலை கொல்லமுன்ன பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
இதன்படி, பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அஷேன் பண்டாரவும், சம்பந்தப்பட்ட புகார்தாரரும் அடுத்தடுத்த வீடுகளில் வசிப்பவர்கள் என கூறப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டாரவின் கார் சாலையை மறித்து நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.