‘வாடிவாசல்’ படத்துக்கான இசைப் பணிகள் ஆரம்பம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் வாடிவாசல்.
ஜல்லிக்கட்டை கருவாகக் கொண்டு இப் படம் உருவாகவுள்ளது. இந்நிலையில் மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சியெடுக்கும் வீடியோக்களும் அண்மையில் வெளியானது.
இப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அதன்படி, வாடிவாசல் படத்துக்கான இசை பணிகள் தொடங்கியமையை புகைப்படத்தின் மூலம் பகிர்ந்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.