ஜனவரி மாதம் முதல் பத்தொன்பது துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

இலங்கையில் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை பத்தொன்பது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.எஸ்.பி. புத்திக மனதுங்க தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த வருடம் பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 12 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவை .
மீதமுள்ள ஏழு சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகளால் ஏற்பட்டவை.
விசாரணைகளின் விளைவாக 68 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட ஆறு, டி -56 துப்பாக்கிகள், இரண்டு த்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குற்றங்கள் தொடர்பாகப் பயன்படுத்தப்பட்ட எட்டு மோட்டார் சைக்கிள்கள், இரண்டு கார்கள், ஒரு வேன் மற்றும் இரண்டு முச்சக்கர வண்டிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.எஸ்.பி. புத்திக மனதுங்க மேலும் தெரிவித்தார்.