முப்படைகளில் இருந்து தப்பியோடிய 679 வீரர்கள் கைது

முப்படைகளில் இருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாத 679 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் நேற்று (5) வரை பொலிஸார் மற்றும் இராணுவப்படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்களின் எண்ணிக்கை 535 ஆகும்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 63 கடற்படை வீரர்களும் 81 விமானப்படை வீரர்களும் அடங்குவர்.
கடந்த மாதம் 22 ஆம் திகதி தகவல் துறையில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், பாதுகாப்பு செயலாளர் ஏர்வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, முப்படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டதாகக் கூறினார்.