ரீல்ஸ் பிரியர்களுக்காக தனி செயலியா?

அமெரிக்கா உட்பட சில நாடுகளில் டிக்டொக் செயலி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராமில் அதிகம் விரும்பப்படும் அம்சமான ரீல்ஸ் காணொளிகளை பிரத்யேகமாகக் கொண்ட புதிய செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு ரீல்ஸ் செயலியை தனியாக வழங்குவதன் மூலம் மெட்டா அதன் வளங்களை விரிவுபடுத்த முடியும்.
இருப்பினும் இதுகுறித்து தற்போதைக்கு பேச்சு வார்த்தை மட்டுமே உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.