உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு இன்று (05) நண்பகல் வரையில் ஐந்து மாவட்டங்களின் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கண்டி, கொழும்பு, கம்பஹா, அம்பாறை மற்றும் இரத்தினபுரி ஆகியவை அந்த ஐந்து மாவட்டங்கள் ஆகும்.
கட்டுப்பணம் செலுத்துவது தொடர்பிலாள அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.
கண்டி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் எதுவும் இதுவரையில் தேர்தலுக்கான கட்டுப் பணத்தை செலுத்தவில்லை எனினும், ஒரு சுயாதீனக் குழு கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளது.
கண்டி மாவட்டத்தில் ஒரு உள்ளூராட்சி நிறுவனம் மாத்திரமே காணப்படுகிறது.
இதேவேளை, 12 உள்ளூராட்சி நிறுவனங்களை உள்ளடக்கிய கொழும்பு மாவட்டத்தில் ஒரு அரசியல் கட்சி மற்றும் ஐந்து சுயாதீன குழுக்கள் தேர்தலுக்கான கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளது.
கட்டுப் பணம் செலுத்துவதற்கான காலஅவகாசம் கடந்த 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.