கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகள்

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, அவர்களுடன் எதிர்வரும் சனிக்கிழமை (08)தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்போது, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை திட்டமிடுவது மற்றும் அவை தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.