சூடானுக்கு 2 தொன் மருந்துகளை அனுப்பி வைத்த இந்தியா

சூடானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை ராணுவப் படை சுமார் 2 வருடங்களாக போரிட்டு வருகிறது.
இதில் இரு தரப்பு படை வீரர்கள், பொதுமக்கள் என சுமார் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 2.5 கோடிக்கும் அதிகமான மக்கள் உணவுப் பற்றாக்குறை மற்றும் நோயினால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூடான் நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக புற்று நோய் மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள் என சுமார் இரண்டு தொன் மருந்துகளை ஏற்றிக்கொண்டு இந்திய கடலோரக் காவல் படையின் கப்பல் சூடான் புறப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.