“இதுதான் என்னுடைய கடைசி அழைப்பு” – தூக்கிலிடப்பட்ட இந்தியப் பெண்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 33 வயது ஷாஜாதி, ஒரு குழந்தையைக் கொலை செய்ததாக கூறி கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் தூக்கிலிடப்பட்டார்.
உயிரிழக்கும் முன் அந்தப் பெண்ணிக் கடைசி ஆசையைக் கேட்டனர், அவர் தன் பெற்றோரிடம் பேச விரும்புவதாகக் கூறினாள்.
உ.பி.யின் பண்டா மாவட்டத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு ஒரு அழைப்பு எடுக்கப்பட்டது, அவர் தன் குடும்பத்தினரிடம் சொன்ன முதல் வார்த்தை “இதுதான் என்னுடைய கடைசி அழைப்பு”.
“அவர்கள் என் இறுதி ஆசை பற்றி என்னிடம் கேட்டார்கள், நான் அம்மாவிடமும் அப்பாவிடமும் பேச வேண்டும் என்றேன்” என்று தனது சகோதரர் ஷம்ஷரிடம் தொலைபேசியில் கூறினார்
அதுதான் அவருடைய கடைசி வார்த்தை என்று ஷம்ஷர் கூறினார். அதன் பிறகு அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. அபுதாபி அரசாங்கத்தின் தண்டனையிலிருந்து அவரைக் காப்பாற்ற குடும்பத்தினர் தங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சித்தனர்.
“நாங்கள் டில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தோம், அங்கு திங்களன்று தனது சகோதரிக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்று எங்களுக்கு அறிவிக்கப்பட்டது,” என்று சகோதரர் திங்கள்கிழமை கூறினார்.
மேலும், “சகோதரியின் இறுதிச் சடங்குகள் மார்ச் ஐந்தாம் திகதி நடைபெறும்” என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேதன் சர்மா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
“ஷாஜாதியின் முகத்தில் சிறுவயதில் ஏற்பட்ட தீக்காயத் தழும்புகள் இருந்தன,” என்று அவரது சகோதரர் கூறினார்.
பொய்யான வாக்குறுதி
உசைர் என்ற நபர் சமூக ஊடகங்கள் மூலம் தம்மை தொடர்பு கொண்டு, ஐக்கிய அரபு இராச்சியத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் ஷாஜாதியின் முகத்தில் உள்ள தழும்புகளை அகற்ற உதவுவதாகக் கூறினார்.
இதன்படி, 2021 ஆம் ஆண்டில், ஷாஜாதி சட்டப்பூர்வ விசாவில் அபுதாபியை அடைந்தார். ஆனால் உசைர் தனது உறவினர் ஃபைஸின் வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய தனது சகோதரியை அனுப்பினார்.
தனது சகோதரி அறுவை சிகிச்சை அல்லது எந்த மாற்றத்தையும் செய்யாமல் வீட்டு வேலைகளைச் செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டார்.
2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஃபைஸின் தம்பதியினருக்கு குழந்தை பிறந்ததுடன், குழந்தையைப் பராமரிக்க ஷாஜாதி நியமிக்கப்பட்டார். டிசம்பர் ஏழாம் திகதி, நான்கு மாதக் குழந்தைக்கு வழக்கமான தடுப்பூசி போடப்பட்டது.
ஊசிப் போடப்பட்ட அன்று இரவே குழந்தை உயிரிழந்துள்ளது.
ஃபைஸின் தம்பதியினர் ஷாஜாதி தங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டினர். பெப்ரவரி 2023இல் அபுதாபி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது சகோதரிக்கு ஜூலை 31, 2023 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
“உசைர் என் சகோதரியை பொய்யான வாக்குறுதிகள் மூலம் ஏமாற்றி, அவரிடமிருந்து மூன்று லட்சம் பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு, பணிப்பெண்ணாகவும் அனுப்பியுள்ளார்.
தன் சகோதரி நிரபராதி, அவள் தன் முகத்தில் இருந்த தழும்புகளை மட்டுமே சரி செய்ய விரும்பினார்” ஷாஜாதியின் சகோதரர் மேலும் தெரிவித்துள்ளார்.