அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முறையாக ஏற்றுக்கொள்ள அமைச்சரவை ஒப்புதல்

அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முறையாக ஏற்றுக்கொள்ள அமைச்சரவை ஒப்புதல்

அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பான “வளமான நாடு – அழகிய வாழ்வு” கொள்கை அறிக்கையை முறையாக ஏற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சரவை தீர்மானத்தில்,

“வளமான நாடு- அழகிய வாழ்வு” என்ற கொள்கை அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது, இது வலுவான உற்பத்தி பொருளாதாரத்தின் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் 120 பில்லியன் அமெரிக்க டொலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இலக்காகக் கொண்டு நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 4 முக்கிய பகுதிகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது:

இந்த 4 முக்கிய பகுதிகளின் கீழ் 40 துணைப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் இவை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன்படி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்களால் “வளமான நாடு- அழகிய வாழ்வு” கொள்கை அறிக்கையை அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்வதற்கும், அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அதற்கேற்ப தங்கள் செயல்பாடுகளைத் திட்டமிட்டு செயல்படுத்துவதற்கும் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This