கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – நீதிமன்ற வளாகத்தின் அனைத்து சிசிடிவி காட்சிகளும் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – நீதிமன்ற வளாகத்தின் அனைத்து சிசிடிவி காட்சிகளும் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு கெமரா காட்சிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தக் காட்சிகள் கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் நீதிமன்றப் பதிவாளரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19ஆம் திகதி காலை புதுக்கடை எண் 05 நீதவான் நீதிமன்றத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், கொழும்பு குற்றப்பிரிவின் வேண்டுகோளின் பேரில் விசாரணைக் குழுக்களுக்கு தொடர்புடைய பாதுகாப்பு காட்சிகளை வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையில், கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் மினுவாங்கொட பகுதியில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்கள் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

Share This