லயன் தொடர் குடியிருப்பில் தீ பரவல் – 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

ஹட்டன் செனன் தோட்டத்திற்கு சொந்தமான கே.எம் பிரிவில் உள்ள லயன் தொடர் குடியிருப்பில் நேற்று திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், 14 வீடுகள் பகுதியளவில் எரிந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் உடமைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதுடன், பொதுமக்களும் ஹட்டன் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்
பாதிக்கப்பட்ட மக்கள் செனன் தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது