2023 – 2024 ஆண்டுகளில் 683 சிறுவர்கள் வீட்டு பணிக்காக வெளிநாடு சென்றுள்ளனர்

2023 – 2024 ஆண்டுகளில் 683 சிறுவர்கள் வீட்டு பணிக்காக வெளிநாடு சென்றுள்ளனர்

இலங்கையில் 2023ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் 683 சிறுவர்கள் வீட்டு பணிக்காக வெளிநாடு சென்றுள்ளதாக கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, ஒழுங்குமுறை நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், ஒரு வணிக வடிவத்தில் செயல்பட்டுள்ளமை தெளிவாகியுள்ளதாக கோப் குழு வலியுறுத்தியது.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தற்போதைய செயல்திறனை ஆய்வு செய்வதற்காக, கோப் குழு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூடியபோது இது குறித்து விவாதிக்கப்பட்டது.

28,165 வீட்டுப் பணியாளர்கள் குடியிருப்புப் பயிற்சி வழங்காமல் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதால் மொத்தம் ரூ. 631,177,650 பயிற்சி வருமானத்தை பணியகம் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இந்த கவனக்குறைவான சூழ்நிலை காரணமாக, மே 2023 முதல் ஜூன் 2024 வரை 683 சிறார்கள் வீட்டு பணிக்காக வெளிநாடு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

Share This