பெப்ரவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பெப்ரவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இவ்வாண்டின் பெப்ரவரி மாதத்தில் 232,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இவ்வாண்டின் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் 232,341 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகைத் தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 34,006 ஆகும்.

ரஷ்யாவிலிருந்து 29,241 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 24,830 சுற்றுலாப் பயணிகளும் வருகைத் தந்துள்ளனர்.

மேலும், இவ்வாண்டின் முதல் 2 மாதங்களில் 485,102 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

Share This