முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களை திணிக்க முயற்சி – பொது பாதுகாப்பு அமைச்சர்

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல்கள் அரச புலனாய்வு சேவை மற்றும் இராணுவ புலனாய்வு ஆகிய இரண்டிற்கும் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
சில மத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இடங்களை அவதானிக்கும்போது, குறிப்பாக சிறுவர்கள் தீவிரவாத சித்தாந்தங்களுக்கு ஆளாக நேரிடும். இந்த சித்தாந்தங்கள் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரணானவை.
“இதுபோன்ற பெரும்பாலான நடவடிக்கைகள் கல்முனைப் பகுதியிலிருந்து பதிவாகியுள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விடயம் குறித்து அரச புலனாய்வு சேவை தீவிர கண்காணிப்பை செலுத்தியுள்ளது. நாட்டில் மீண்டும் தீவிரவாதத்திற்கு இடமளிக்க முடியாது.
“இதுபோன்ற பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் எனவும் அதற்கான நாங்கள் பணியாற்றி வருகிறோம்.” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.