மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் விபத்து – 12 பேர் படுகாயம்

மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் விபத்து – 12 பேர் படுகாயம்

குருவிட்ட – லஸ்ஸகந்த வளைவு பகுதியில் இன்று (03) பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களை உள்ளூர்வாசிகள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர், அவர்களில் இருவர் உடனடியாக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த விபத்து இன்று (03) காலை 6 மணியளவில் நடந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். குறித்த வான் அந்த பகுதியின் பல்வேறு இடங்களில் இருந்து மாணவர்களை ஏற்றிவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This