காசா பகுதிக்குள் மனிதாபிமான உதவிகளை நிறுத்திய இஸ்ரேல் – அச்சத்தில் பலஸ்தீனியர்கள்

காசா பகுதிக்குள் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.
மேலும் இரண்டாம் கட்டமாக தொடர்வது குறித்து உடன்பாடு இல்லாமல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் முடிவடைந்த பின்னர், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மறுத்துள்ளது.
முன்னதாக, காசாவில் மீதமுள்ள கைதிகளில் சிலரை விடுவிப்பதற்கு பதிலாக, ரமலான் முழுவதும் காசாவில் போர் நிறுத்தத்தை
நீட்டிப்பதற்கான அமெரிக்க ஆதரவு திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.
காசாவில் நிரந்தர போர் நிறுத்தத்தை எட்டுவதற்காக ஜனவரியில் இஸ்ரேல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தை செயற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் ஹமாஸ் பதிலளித்தது.
இடிபாடுகள் மற்றும் அழிவுக்கு மத்தியில், முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்திற்கான உண்ணாவிரதத்தின் முதல் நாளில்
மீண்டும் போர் தொடங்குமோ என்ற அச்சத்தை காசாவில் உள்ள பலஸ்தீனியர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த இஸ்ரேல் ஹமாஸ் மோதலால் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் ஒரு லட்சத்திற்கும்
மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.